20 வயதில் சந்தித்தேன்.. 30 வயதில் திருமணம்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒளிப்பதிவாளரை மணந்த பிரபல நடிகை!
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஆஹானா கிருஷ்ணா மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான மலையாள ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பர் 13ம் தேதி நட்சத்திர தம்பதிகளான இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், நேற்று இரவு தங்கள் சமூக வலைதள பக்கங்கள் மூலம் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் அறிவித்துள்ளனர்.
மேலும், நடிகை ஆஹானா கிருஷ்ணன் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியை தனது 20வது வயதில் சந்தித்ததாகவும் 10 வருடங்கள் காதலித்து இப்போ 30வது வயதில் திருமணம் செய்துக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
உனக்கு 31 எனக்கு 30: 30 வயதாகும் மலையாள நடிகை ஆஹானா கிருஷ்ணன் 31 வயதாகும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியை திருமணம் செய்துள்ளார். நயன்தாரா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை ஆஹானா கிருஷ்ணன் நியான் ஸ்டீவ் லோபஸ் படத்தின் மூலம் 2014ல் திரையுலகில் அறிமுகமானவர். லூகா, பதினெட்டாம் படி, அடி, லோகா சாப்டர் 1 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒளிப்பதிவாளர்: 2019ம் ஆண்டு நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராக அறிமுகமானதே லூகா படத்தில் தான். அந்த படத்தில் தான் ஆஹானா கிருஷ்ணனும் நடித்துள்ளார். அப்போது இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்தாலும், இருவருக்கும் வயது குறைவு என்பதால் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவை இப்போதுதான் எடுத்துள்ளனர்.
A post shared by Nimish Ravi (@nimishravi)
துல்கர் சல்மான் நடித்த குரூப், கிங் ஆஃப் கோத்தா, லக்கி பாஸ்கர், துல்கர் தயாரித்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிமிஷ் ரவி சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்று அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த தம்பதியினருக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.