வணிகத்துக்கு பயன்படுத்தப்படும் குடியிருப்பு வளாகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வணிகத்துக்கு பயன்படுத்தப்படும் குடியிருப்பு வளாகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: கட்டிடத் துணை விதிகள் மற்றும் நிலப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிரத்தியேகமாக குடியிருப்புப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வணிக நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதுசார்ந்த பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அனுமதிகளை மீறிய வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் வளாகங்கள் முதற்கட்டமாக சீல் வைக்கப்பட வேண்டும். ஒரு இடம் குடியிருப்புப் பகுதியாக நியமிக்கப்பட்டு, அதன் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அங்கு காணப்படும் அனைத்து வணிக நடவடிக்கைக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.