📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 19, 2026 06:02 AM

வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல

வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல

கடலில் பயணிக்கும் ஒரு கப்பல் கடும் புயலில் ஆர்ப்பரிக்கும் பேரலைகள் இடையில் சிக்கி மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் நேரத்தில், அந்த கப்பலை காப்பாற்ற அதில் இருக்கும் அதிக எடையுள்ள சரக்குகளை கடலில் வீசி கப்பலை எடை குறைந்ததாக மாற்றி காப்பாற்றுவது வழக்கம்.

மந்திரிசபை கூட்டம்

அதுபோன்ற ஒரு அவசர நடவடிக்கை தான் கடந்த வாரம் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதாவது உத்திசார் மறுசீரமைப்பு நடவடிக்கையாக, ஐ.டி.பி.ஐ. வங்கியின் பங்குகளை கனடா நிறுவனத்துக்கு விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஐ.டி.பி.ஐ. வங்கி, 1964-ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

எல்.ஐ.சி. நிறுவனம்

இதற்கு பிறகு, ஐ.டி.பி.ஐ. வங்கி கடந்த நிதியாண்டில், அதாவது 2025-26-ம் நிதியாண்டில், வாராக்கடன் நெருக்கடியிலிருந்து ஓரளவுக்கு மீண்டு, சாதனை அளவாக ரூ.9,513 கோடி லாபம் ஈட்டியது. எல்.ஐ.சி. ஒரு காப்பீட்டு நிறுவனம் என்பதால், நீண்டகால அடிப்படையில் ஒரு வணிக வங்கியை நடத்தி வருவது அதன் வணிக நோக்கத்துக்கு பொருந்தாது. எனவே, எல்.ஐ.சி. தனது முதலீட்டை விற்பனை செய்வது அவசியமாகிறது.

மந்திரிசபை ஒப்புதல்

ஆக மொத்தம், 60.72 சதவீத பங்குகளை ரூ.52,878 கோடிக்கு, அதாவது ஒரு பங்கு ரூ.81 என்ற விலையில், கனடாவை சேர்ந்த பேர்பாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேர்பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மிகப்பெரிய கோடீசுவரரான பிரேம் வத்சா ஆவார்.

மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால், எல்.ஐ.சி. ஒரு பங்கின் விலை ரூ.61-க்கு வாங்கி இருந்தது. தற்போது ஒரு பங்குக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.20 லாபம் ஈட்டி உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கான கூட்டு லாபம் வெறும் 4.85 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாகும்.

இந்த விற்பனையின் மூலம், வணிக வங்கிகளை நடத்தும் தொழிலில் அரசு ஈடுபடவேண்டியதில்லை, அதாவது அரசின் கடமை வணிகம் நடத்துவது அல்ல என்ற அடிப்படை தத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு என்பது திறமையான ஒழுங்குமுறை அமைப்பாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, வியாபாரம் நடத்தும் தொழிலில் ஈடுபடக்கூடாது. இது ஒரு நிதிச் சீர்திருத்தத்தின் தொடக்கம். இதுபோல மேலும் பல துணிச்சலான சீர்திருத்தங்களை மத்திய அரசு முன்னெடுக்கவேண்டும்.