விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும்
திருப்பூர்,
தாராபுரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்த சீமான், 'விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும்' என்று கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் அனல் பறந்த பிரசாரம் முடிந்தது. அதன்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். தாராபுரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடையில் சீமான் பேசும்போது கூறியதாவது:-
ஒரு சிறந்த சமூகத்தை கட்டமைக்க கல்வியும் அறிவும்தான் அடிப்படை தேவையாகும். உலகிலேயே தலைசிறந்த கல்வியை இந்நாட்டு மக்களுக்கு இலவசமாகவும் தரமாகவும் வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமை. பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளின் கல்வி தரத்திற்கும், டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள கல்வி கட்டமைப்புக்கும் ஈடாகத் தமிழகத்தில் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும்.
கேள்வி எழுப்ப வேண்டும்
இன்று கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துமே தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளே வழங்குவார்கள் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேலை என்ன என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகளாகவே வாழும் அவல நிலை மாற வேண்டும். பிற தொழில்களில் ஈடுபடுவோர் தங்கள் பொருட்களுக்கான விலையை தாங்களே தீர்மானிப்பது போல், விவசாயியும் தான் விளைவிக்கும் பொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக வேளாண்மை துறைக்கு கீழ் சிறப்பு அமைப்பும், பொருட்கள் வீணாகாமல் இருக்க மாநிலம் முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்குகளும் அமைக்கப்படும்.
நீரும், உணவும் இன்றி வாழ முடியாது