📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 11, 2026 07:04 PM

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் அமைச்சர் விஜய்?

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் அமைச்சர் விஜய்?

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஐதராபாத்தை தெலங்கானாவிடம் இழந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சிறிய நகரங்களை அம்மாநில அரசு மேம்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயவாடா நகரிலும் தொழில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அண்டை மாநிலங்களுடனான ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டில் விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து விஜயவாடா உத்சவ் 2.O நிகழ்ச்சிக்கு வரும் அக்டோபர் 13 முதல் ஒரு வார காலத்திற்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தென்மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.

இதனை ஏற்று முதல் அமைச்சர் விஜய், ஆந்திரா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து நதிநீர் விவகாரம் குறித்து பேசவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.