📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 07:02 AM

டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை

டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை

​புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., ரத்து செய்யக் கோரியும் நாளை (அக்.,10) டில்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதே சமயம், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என டில்லி போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் மற்றும் புதுடில்லி பகுதிகளில் பி.என்.எஸ்.எஸ்., பிரிவு 163ன் கீழ் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையொட்டி, கல்லூரிகள், பல்கலை விடுதிகள், மார்க்கெட்டுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் போலீசார் நேரடியாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வதந்திகளை நம்பி அனுமதியற்ற போராட்டத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது; தடையை மீறினால் கைது நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு மொத்தமாக உணவு ஆர்டர்கள் சப்ளை செய்யவோ அல்லது அடைக்கலம் கொடுக்கவோ கூடாது என வியாபாரிகளுக்கும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கிறது எனவும், ஜனநாயக உரிமையை நிலைநாட்ட போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், டில்லி குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

​போலீசாரின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறம், போராட்டக்காரர்களின் தீவிர அழைப்பு மறுபுறம் என, தலைநகர் டில்லியில் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.