📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 28, 2026 08:04 AM

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைந்தது; சீலா கிலோ ரூ.1,000

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைந்தது; சீலா கிலோ ரூ.1,000

தூத்துக்குடி,

கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக, தூத்துக்குடியில் மீன்களின் வரத்து கடுமையாக குறைந்துள்ளது. இதனால் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்ந்து, சீலா மீன் கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது.

மீன் வரத்து குறைந்தது

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கமாக ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மீனவர்கள் அதிக அளவில் மீன்களுடன் கரை திரும்புவர். ஆனால், இந்த வாரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதன் காரணமாக, பெரும்பாலான நாட்டு படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

மோசமான வானிலை

புரட்டாசி 2-வது சனிக்கிழமை

தற்போது புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதாலும், மீன் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட சற்றே குறைவாகவே காணப்பட்டது.

அசைவ பிரியர்கள்

இருந்தபோதிலும், அசைவ பிரியர்களும் வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்த மீன்களை ஏலம் எடுக்க போட்டி போட்டனர். வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்ந்த போதும், அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நேற்று சீலா மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் கடந்த வாரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.1000 வரை விலை உயர்ந்தது.

விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ 450 வரையும், ஊழி மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும், சூறை மீன்கள் கிலோ ரூ.200 வரையும் விற்பனை செய்யப்பட்டன.

மீனவர்கள் மகிழ்ச்சி