📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 12, 2026 12:40 PM

தொடக்கப் பள்ளி 1 பதிவு; வீடுகளுக்கான பெற்றோரின் தேடல் விரிவடையலாம்

தொடக்கப் பள்ளி 1 பதிவு; வீடுகளுக்கான பெற்றோரின் தேடல் விரிவடையலாம்

பள்ளியிலிருந்து 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வசிக்கும் பிள்ளைகளுக்காக இடங்களை ஒதுக்கும் புதிய விதிமுறைகள் இந்த வாரம் அறிமுகம் கண்டன.

அதனைத் தொடர்ந்து, அதிகம் நாடப்படும் 12 தொடக்கப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் இப்போது கூடுதல் தொலைவிலுள்ள வீடுகளையும் வாங்குவது பற்றி யோசிக்கலாம்.

ஆனாலும், இந்தப் பள்ளிகளுக்கு அருகிலுள்ள வீடுகளுக்கான தேவை குறையும் என்று சொத்துத் துறை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த 12 பள்ளிகளில் புக்கிட் தீமா, மரின் பரேட் போன்ற முக்கிய வட்டாரங்களில் அமைந்துள்ளதாக இஆர்ஏ சிங்கப்பூர் சொத்து முகமையின் முக்கிய நிர்வாக அதிகாரி யூஜின் லிம் கூறினார்.

அவை, பள்ளிகளுக்கு அருகில் இருப்பதைத் தாண்டிய வேறு பல காரணங்களுக்காகவும் வீடுகளை வாங்குபவர்களிடையே தொடர்ந்து பிரபலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ரியாலியன் குழுமச் சொத்து நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரும் வியூகவியலாளருமான கிறிஸ்டின் சன் மேலும் கூறுகையில், தொலைவில் வசிப்பவர்களோடு ஒப்பிடும்போது, பள்ளியின் 2 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் தங்களுக்குப் போட்டி குறைவாக இருக்கும் என்று பெற்றோர் கருதலாம் என்பதால் இந்தப் பள்ளிகளுக்கு 2 கிலோமீட்டர் உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து நிலையாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

“இருப்பினும், பெற்றோர் இப்போது பள்ளிக்கு மிக அருகில் வசிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், மிகையாக விரும்பப்படும் இந்த வீடுகளின் விலையை உயர்த்த வாய்ப்பில்லை,” என்று திருவாட்டி சன் கூறினார்.

2027ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி 1ஆம் வகுப்பிற்கானப் பதிவு நடவடிக்கையிலிருந்து, 12 பள்ளிகள் ‘2சி’ கட்டத்தின்கீழ் இரண்டு பிரிவுகளிலான முறையைப் பின்பற்றும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதில் பள்ளிக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் பிள்ளைகளுக்காக 30 இடங்களும், அதற்கும் அப்பால் வசிப்பவர்களுக்கு மேலும் 30 இடங்களும் ஒதுக்கப்படும்.

பள்ளிகளுக்குச் செல்வதை மேலும் எளிதாக்கவும் சமூகத்திலுள்ள வெவ்வேறு பிரிவினருக்கு இடையிலான பழக்கத்தையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஏனெனில், இப்பள்ளிகளில் இருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள வீடுகளில் 40 விழுக்காட்டிற்கும் குறைவானவையே பொது வீடமைப்பு வீடுகளாக உள்ளன.

‘2சி’ கட்டம் என்பது பள்ளியுடன் எவ்வித முன்தொடர்பும் இல்லாத பிள்ளைகளுக்கானது.

இக்கட்டத்தில், சேர்க்கைக்குப் பிள்ளையின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம், முக்கியப் பங்கு வகிக்கிறது.

இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளுக்கு, ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம் கருத்தில் கொள்ளப்படாது.