தமன்னாவை தூக்கி சாப்பிட்ட நோரா.. ஜெயிலர் 2 ‘பிந்தாஸ்’ பாடல் எப்படி இருக்கு?.. அனிருத் சம்பவம்!
சென்னை: சன் பிக்சர்ஸ் ஜெயிலர் 2 படத்தை எந்தளவுக்கு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பதை அறிந்துக் கொள்ள தற்போது வெளியாகியுள்ள 'பிந்தாஸ்' பாடலை பார்த்தாலே போதுமானதாகி விடும். பாலிவுட் கவர்ச்சி நடிகை பாகுபலி படத்தில் நடனமாடிய நோரா ஃபதேகி தமன்னாவையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்னும் 2 வாரங்களில் ஒட்டுமொத்த தியேட்டர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை காண போகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு கடைசியாக மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் படமாக ஜெயிலர் அமைந்த நிலையில், ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு முன்பு வெளியான பாடல்களை விட இன்று வெளியாகி உள்ள பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வைப் ஏற்றும் என ரசிகர்கள் ரிப்பீட் மோடில் நோரா ஃபதேஹியின் நடனத்தை பார்த்து வருகின்றனர்.
ஒளித்து வைத்த அனிருத்: இந்த பாட்டை அல்லவா காவாலா பாடல் மாதிரி முதலில் அனிருத் வெளியிட்டு இருக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் படத்தின் மீதான ஹைப்பை எகிற வைக்க சரியாக ஒளித்து வைத்து ரிலீஸ் செய்துள்ளார் அனிருத். காவாலா, அரபிக் குத்து, மோனிகா வரிசையில் தாறுமாறாக பிந்தாஸ் பாடல் தெறிக்கிறது என ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமன்னாவை தூக்கி சாப்பிட்ட நோரா: பாலிவுட் கவர்ச்சி கன்னி நோரா ஃபதேஹி ஜெயிலர் 2 படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. ஆனால், திடீரென பூர்ணாவை வைத்து உருவாக்கிய அல்ல போலேலே பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட்டதும் ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தன. இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கான செம ட்ரீட்டை நெல்சன் தரமாக செய்துள்ளார்.
இன்ஸ்டா ரீல்ஸ் தெறிக்கும்: இன்ஸ்டாகிராமில் நோரா ஃபதேஹி குதித்துக் கொண்டே ஆடியுள்ள அட்டகாசமான குத்தாட்டம் இன்ஸ்டா ரீல்ஸ் ஆக சோஷியல் மீடியா முழுக்க தெறிக்கப் போவது உறுதியாகி உள்ளது. ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்த பாடலுக்கு பிந்தாஸ் டான்ஸ் ஆடினால் இன்னும் 15 நாளில் புரமோஷன் பக்காவாக மாறிவிடும். ஜெயிலர் 2 ரேவ் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார் பேசுவாரா? மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.