📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 07:01 PM

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிவிட்டதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அத்துடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.