📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 10:03 AM

திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி: மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி: மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

மதுராந்தகம்: தமிழகத்​தில் திமுக, பாஜக, அதி​முக இடையே ரகசியமான கூட்​ட​ணி​ உள்ளதாகவும் மக்​களால் அமைந்த இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடி​யாது என்றும் மது​ராந்​தகம் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் முதல்வர் விஜய் கேள்வி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்​தில் மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக உள்பட 5 முனைப்​போட்டி நில​வு​கிறது. அந்​தவகை​யில் மது​ராந்​தகம் தவெக வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்து ஆத்​தூா் சுங்​கச்​சாவடி அருகே முதல்​வா் விஜய் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். முன்​ன​தாக திறந்​தவெளி வாக​னத்​தில் ரோடு ஷோ நடத்​திய அவர், அங்​கிருந்த எம்​ஜிஆர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​ வணங்கினார்.

பின்​னர் பொதுக்​கூட்​டத்​தில் விஜய் பேசி​ய​தாவது: நாட்​டில் ஆபாச நதி ஓடிக் கொண்​டிருக்​கிறது. திமுக மற்​றும் ஸ்டா​லின் குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​களும் இப்​படி​தான் பேசுகிறார்​கள். ஊழல் என்​றால் ஆதா​ரத்​தைக் காட்ட சொல்​கிறார்​கள். காட்​டி​னால் நீதி​மன்​றத்​தில் நிரூபி​யுங்​கள் என்​கிறார்​கள்.

ஸ்டா​லின் சார் பாவம், அவர் தோற்று போய் இருக்​கிறார். அவரை ஏன் விமர்​சிக்​கிறீர்​கள் என கேள்வி எழுப்​பு​கிறார்​கள். ஸ்டா​லின் சார் தோற்​றாலும் ஜெயித்​தா​லும் எனக்கு அங்​கிள்​தான். ஸ்வீட் அங்​கிள்.

மேலும், முதல்​வ​ரானதும் மெட்​ரோவை ஆய்வு செய்ய பாலத்​துக்​குச் சென்​றால், நான் கட்​டிய பாலத்​தில் நீங்​கள் ஏன் ஆய்வு செய்​கிறீர்​கள் என்​கிறார். இந்த பாலத்தை என்ன அவர் சொந்தப் பணத்​திலா கட்​டி​னார். அவர் ரூ.10 ஆயிரம் மட்​டும் தான் வைத்​திருக்​கிறா​ராம்.

மக்​கள் காசை நாங்​கள் தொட மாட்​டோம். தொட்​ட​வர்​களை​யும் விட மாட்​டோம். அதனால் தான் சட்​டப்பேரவையில் அந்த காலத்​தில் திமுக செய்த ஊழல்களை எல்​லாம் சொன்​னோம். ஊழலின் ஊற்​றுக்​கண் யார் என்​பதை இளம் தலை​முறைக்கு தெரியப்​படுத்த வேண்​டியது நமது கடமை. தமிழகத்​தில் திமுக, பாஜக, அதி​முக இடையே ரகசிய கூட்​ட​ணி​ உள்​ளது. டெல்​லி​யில் இருக்​கும் திமுக பெயர் பாஜக, தமிழகத்​தில் பாஜக பெயர் திமுக. மக்​களால் அமைந்த இந்த ஆட்​சியை யாராலும் கலைக்க முடி​யாது.

சிறுமிகளை ஒரு​வர் பல ஆண்​டு​களாக சீரழித்து வந்​துள்​ளார். திமுக ஆட்​சி​யில் புகார் கொடுத்​தும், அதை மூடி மறைத்​து​விட்டார்​கள். அப்​படி என்ன டீலிங் எனத் தெரிய​வில்​லை. ஸ்டாலின் சார் வாயைத் திறங்​கள். இந்த விவ​காரத்​தில் திமுக - அதி​முக வாய் ​திறக்​க​வில்​லை. பெண்​கள் பாது​காப்​புக்​கென்றே பிறந்த மாதிரி பேசுகிறார்​கள். குழந்​தைகளை சீரழித்த நபரை பற்றி பேசக் கூட முடி​யாத நீங்​கள் எல்​லாம் என்ன அரசி​யல்​வா​தி​கள்.

கடந்த 34 ஆண்​டு​களாக எல்லா விஷ​யத்​தை​யும் பார்த்​து​விட்டு தான் அரசி​யலுக்கு வந்​திருக்​கிறேன். திமுக ஊழல் செய்​த​தில்​லை, அல்​லது செய்ய மாட்டோம் என்று உங்​களால் சொல்ல முடி​யு​மா. அரசி​யலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பின்​பும் உங்கள் சொத்​துக் கணக்கு எவ்​வளவு என்று சொல்ல முடி​யு​மா.

ஆபாச பேச்சு

திமுக​வுக்கு நம் மீது எந்த குற்​றச்​சாட்​டும் வைக்க முடிய​வில்​லை. அந்த விரக்​தி​யில், எனது அம்​மாவை தப்பாக பேசி​னார்​கள். அதைக்​கூடபொறுத்துக் கொண்​டேன். ஆனால், அன்பு காட்​டு​கிற தமிழக பெண்​களை ஆபாசமாக பேசுகிறார்​கள். திமுக தலை​மை​யும் இந்த மாதிரி​தான் பேசுகிறது. மேலும் தொகுதி மக்​களின் தேவை​களை பூர்த்தி செய்​வதே இந்த அரசின் கடமை​யாகும். இவ்​வாறு பேசி​னார்.

முதல்​வர் தந்த வாக்​குறு​தி​கள்

மது​ராந்​தகம் தொகு​திக்கு செய்​ய​வுள்ள திட்​டங்​கள் குறித்துமுதல்​வர் அளித்த வாக்​குறு​தி​கள்: செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வாடகைக் கட்​டிடத்​தில்இயங்கி வரும் சமூகநீதி மாணவர்​கள் விடு​தி​களுக்கு சொந்த கட்​டிடம் கட்​டிதரப்​படும், உணவு தானியங்​களை சேமிக்க சேமிப்புக் கிடங்​கும் அமைக்​கப்​படும், மது​ராந்​தகம் அரசு மருத்​து​வ​மனைக்கு தாய் சேய் நலக்​கட்​டிடம், புதிய உயரடுக்கு வெளிநோ​யாளி​கள் பிரிவு கட்​டிடம், தாய் மற்​றும் பச்​சிளம் குழந்​தைகள் பராமரிப்பு பிரிவுகள் ரூ.100 கோடி செல​வில் அமைக்​கப்​படும். மது​ராந்​தகம் ஏரி​யின் 5-வது பாசன கால்​வாயை கான்​கிரீட் கால்​வா​யாக ரூ.10 கோடி செல​வில் செயல்​படுத்​தப்​படும். (இவை அனைத்​தும்​ பட்​ஜெட்​ கூட்​டதொடரில்​ செங்​கல்​பட்​டு மாவட்​டத்​துக்​கு அறிவிக்​கப்​பட்​டதிட்​டங்​களாகும்​)