📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 01:03 PM

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்கம் தள்ளிப்போகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். செப் 15ல் திட்டமிடப்பட்ட தேதியில் துவங்கப்படாது; திட்டத்தில் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை.

அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது. பருவமழை துவங்க உள்ள நிலையிலும் டெங்கு சீசன் ஆரம்பிக்க போகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம்.

கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மழைநீர் தேங்காத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். வீடு உட்பட எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படும்.

மதியம் 1:00 முதல் 2:00 மணி மற்றும் மாலை 4:00 -6:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு எடுத்து வரவும் தடை விதிக்கப்படும். சுகாதாரத் துறையின் முதல் நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

இரண்டாவது தான் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது; ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செய்திகளும் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்; மக்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.