📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 04:03 PM

டெங்கு ஒழிப்பில் மக்கள் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம்; அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள்

டெங்கு ஒழிப்பில் மக்கள் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம்; அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள்

சென்னை: டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதி; மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைக்காலங்களில் தேங்கும் துாய்மையான தண்ணீரில் உருவாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது; தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது; டெங்குவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்தாண்டு இதுவரை 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வீடுகளுக்கு அருகே நீர் தேங்காமல் பா்ரத்துக்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்பு தொடர்பாக ஆய்வுகள் நடைபெற உள்ளன. உடலில் தடவிக்கொள்ளும் கொசு விரட்டிகளால் பலன் உண்டா என ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.