புடவையை கழட்டி எறிஞ்சாச்சு.. இன்ஸ்டாகிராமை ஸ்தம்பிக்க வைத்த சீரியல் நடிகை மதுமிதா!
சென்னை: சின்னத்திரையில் புடவையிலும், குடும்பப் பாங்கான தோற்றத்திலும் தோன்றி தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த நடிகைகள், நிஜ வாழ்க்கையில் தங்களின் அல்ட்ரா மாடர்ன் அவதாரத்தைக் காட்டி அதிர்ச்சி வைப்பது வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில், தன் கியூட்டான நடிப்பால் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்த நடிகை மதுமிதா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தை கொளுத்தி போட்டுள்ளன.
எதிர்நீச்சல் மதுமிதா: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல்' முதல் பாகத்தில் 'ஜனனி' என்ற முதன்மை வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர் நடிகை மதுமிதா. எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திலும் இவரே நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பார்வதி வெங்கடாசலம் அந்த ரோலில் நடித்து வருகிறார். இதனால் மதுமிதா விஜய் டிவியின் பக்கம் தாவிவிட்டார்.
அய்யனார் துணை: தற்போது விஜய் தொலைக்காட்சியில் உச்சக்கட்ட டிஆர்பி அள்ளி முதலிடத்தில் தூள் கிளப்பும் 'அய்யனார் துணை' தொடரில் 'நிலா' என்ற கதாநாயகியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் இவர் கட்டும் புடவையும், இயல்பான குடும்பப் பாங்கான நடிப்பும் இவருக்கென மிகப்பெரிய குடும்ப ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
குட்டை பாவாடை பிக்ஸ்: சீரியலில் ஹோம்லியாக வரும் மதுமிதா, தனது சமூக வலைதள பக்கத்தில் அப்படியே தலைகீழாக மாறி 'மாடர்ன் குயினாக' அவதாரம் எடுத்துள்ளார்!தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு நிற வி-நெக் டாப்ஸ் கறுப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து, தொடை தெரியக் குட்டைபாவாடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படுக்கையறையை நினைவூட்டும் பின்னணியில், நாற்காலியில் அமர்ந்தபடி அவர் கொடுத்துள்ள கில்லர் போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "அடடா... சீரியல்ல புடவையில வர்ற நம்ம குடும்பக் குத்துவிளக்கு நிலாவா இது? நிஜத்துல செம ஹாட்டு என்றும், கவர்ச்சியிலும் உங்களை அடிச்சுக்க ஆள் இல்லை தலைவி என்றும் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாவில் தீயாய்ப் பரவி வருகிறது.