📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 03:03 AM

இறந்தவர்கள் 2.80 கோடி பேர்; இடம் பெயர்ந்தவர்கள் 6.30 கோடி பேர்; வாக்காளர் பட்டியலில் நீக்கியது இவர்களைத்தான்!

இறந்தவர்கள் 2.80 கோடி பேர்; இடம் பெயர்ந்தவர்கள் 6.30 கோடி பேர்; வாக்காளர் பட்டியலில் நீக்கியது இவர்களைத்தான்!

- நமது நிருபர் -

நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., மூலம், 13 கோடி பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். முகவரியில் இல்லாதது, நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடியேறியது, உயிரிழந்தது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு போன்ற காரணங்களால், இவர்கள் நீக்கப்பட்டனர்.

ஆனால், எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13 கோடி பேரையும் சேர்க்க வேண்டும் எனக்கோரி வருகின்றன. கடந்த சில நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக நிராகரித்தது.

இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட விளக்கத்தில், நாடு முழுதும் மூன்று கட்டமாக நடந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில், 95.40 கோடி வாக்காளர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன அதில், உயிரிழந்தது, இடம் பெயர்ந்து போன்ற பல்வேறு காரணங்களால், 13.39 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

13.39 கோடி பேருக்கான 'பிரேக்-அப்' இதுதான்!

* இல்லாதவர்கள், கண்டறிய முடியாதவர்கள் - 3.01 கோடி பேர்

* இடம் பெயர்ந்தவர்கள் - 6.30 கோடி பேர்

* இறந்தவர்கள் - 2.80 கோடி பேர்

* இரு இடங்களில் ஓட்டு இருப்பவர்கள் - 1.02 கோடி பேர்

* மற்றவர்கள் - 26 லட்சம் பேர்

பல்வேறு மாநிலங்களில் உள்ள, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு நடத்தி இப்பட்டியலை தயாரித்தனர். இவை அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த, சுமார் 22 லட்சம் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பூத் வாரியாக வழங்கப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், ஆட்சேபனை அல்லது விடுபட்ட பெயர்களை சேர்க்க ஒரு மாத அவகாசம் இருந்தது. இக்காலத்தில் தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சேர்க்கவும், தகுதியற்ற பெயர்கள் மீது புகார் அளிக்கவும் முழு உரிமை இருந்தது. எஸ்.ஐ.ஆர்., பணியின் போது தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் கவனக்குறைவாக விடுபட்டிருந்தால், அவர்கள், 'படிவம் - 6' மூலம் பெயர்களை மீண்டும் சேர்க்கலாம். தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய அனைத்து சட்டப்பூர்வ வழிகளும் திறந்தே வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைகளை தாண்டி ஒருவரின் வாக்காளரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றால், அவர் கலெக்டர் அல்லது தலைமை வாக்காளர் அதிகாரி முன்பு முறையிடலாம் என தேர்தல் கமிஷன் கூறியது. தேர்தல் கமிஷன் இவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்தாலும் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.