📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 05:03 PM

புகைமூட்டமாக இருந்தாலும் எஃப்1கார்ப் பந்தயம் திட்டமிட்டபடி நடக்கும்

புகைமூட்டமாக இருந்தாலும் எஃப்1கார்ப் பந்தயம் திட்டமிட்டபடி நடக்கும்

புகைமூட்டமாக இருந்தாலும் எஃப்1 கார்ப் பந்தயப் போட்டி திட்டமிட்டபடி நடக்கும். வெளிப்புற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் மாற்றமில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களிலும் கடந்த 24 மணி நேரமாக பிஎஸ்ஐ எனும் காற்றுத்தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் நீடிக்கிறது.

இந்தோனீசியக் காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் பல வாரங்களாகச் சிங்கப்பூரைச் சூழ்ந்து, உலகளாவிய காற்று மாசுபாட்டின் தரவரிசையில் அது முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இவ்வார இறுதியில் சிங்கப்பூரின் ஃபார்முலா 1 பந்தயம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஃபார்முலா ஒன் மேனேஜ்மென்ட்’ தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டெஃபானோ டொமெனிகாலி, நிலவரத்தை உற்றுக் கவனித்து வருவதாகக் கூறினார்.

அற்புதமான வார இறுதியாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் மிக முக்கிய நிகழ்வான இந்தக் கார்ப் பந்தயத்தில் ‘லானா டெல் ரே’, ‘மார்க் ரான்சன்’ மற்றும் அனைத்துலகக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

இதில் குறைந்தது 300,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இவ்வார இறுதியில் எந்தவொரு பிரச்சினையும் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை,” என்று அவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

பெரும்பாலும் திறந்தவெளியில் நடைபெறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யத் திட்டமிடப்படவில்லை என்று பந்தய ஏற்பாட்டாளரான ‘சிங்கப்பூர் கிராண்ட் ஃபிரிக்ஸ் கூறியது.

இந்தோனீசியா அண்மைய ஆண்டுகளில் மிக மோசமான காட்டுத் தீயை சந்தித்து வருகிறது. இதற்கு வறண்ட வானிலையை அதிகப்படுத்தும் எல் நினோவும் ஒரு காரணம்.

இதனால் இவ்வட்டாரம் முழுவதும் வாரக்கணக்கில் அடர்ந்த புகைமூட்டம் நிலவுகிறது.

வெள்ளிக்கிழமை காற்றின்தரம் மேலும் மோசமடைந்தது. இதனால் சிங்கப்பூர் முழுவதும் தூசுமூட்டமாகக் காணப்பட்டது.