ஃபிளைதுபாய் விமானி குணமடைந்து வருகிறார்: இந்தியத் தூதர்
புதுடெல்லி: இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த ‘ஃபிளைதுபாய்’ விமானத்தில் துணை விமானியால் கத்திக்குத்துக்கு ஆளான இந்திய விமானி ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.
விமானி ஸ்மித் மச்சாரையும் அவரது குடும்பத்தினரையும் தூதர் தீபக் மிட்டல் மருத்துவமனையில் சந்தித்தார்.
“அவர் சரளமாகப் பேசி, சிறித்துக் கொண்டிருந்தது அனைவருக்கும் ஆறுதலாக அமைந்தது. முக்கியமாக அவரது குடும்பத்தினர் அதனால் களிப்படைந்தனர்,” என்றார் தூதர்.
பிரசார் பாரதி என்ற இந்திய அரசு ஊடகத்திடம் கருத்துரைத்த தூதர், மிட்டல் இந்தியாவின் வீரமகன் என்று புகழாரம் சூட்டினார்.
ஸ்மித் மச்சார் சீரான உடல்நலத்துடன் இருப்பதாகவும் ஐக்கிய அரபுச் சிற்றரசில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) பிரசார் பாரதி செய்தி தெரிவித்தது.