📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 01:03 AM

பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணிநேரத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த நடிகை கோயல் மல்லிக்

பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணிநேரத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த நடிகை கோயல் மல்லிக்

பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணிநேரத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நடிகை கோயல் மல்லிக் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. அக்கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் நடிகை ருக்மிணி மல்லிக் என்ற கோயல் மல்லிக் பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டார். பின்னர் சில மணிநேரத்தில் அக்கட்சியின் வேட்பாளராக அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

அப்போது மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மற்றும் கட்சியின் மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோர் உடனிருந்தனர். தவிர, மூத்த மந்திரிகள் தபஸ் ராய் மற்றும் சங்கர் கோஷ் உள்ளிட்டோரும் இருந்தனர்.

கடந்த ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 வரை திரிணாமுல் காங்கிரசின் எம்.பி.யாக பதவி வகித்த மல்லிக், சட்டசபை தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்ததும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனை முன்னிட்டு அவரை மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நியமனம் செய்து பா.ஜ.க. நேற்று அறிவித்தது.