📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 10:03 PM

நெல்லையில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம்: 2 பேர் கைது

நெல்லையில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம்: 2 பேர் கைது

நெல்லையில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம்: 2 பேர் கைது

நெல்லை: நெல்லையில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை டவுன் மணிப்புரத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) மற்றும் அவரது சகோதரர் டால்டன் (76) இவர்கள் மணிப்புரத்தில் ஒரே காம்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். செந்தில் குமாருக்குச் சொந்தமான கோயில் அருகே உள்ள இடத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக டால்டன் குடும்பத்தினருக்கும், செந்தில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தில்குமார் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்றபோது, கோயில் முன்பு வைத்து டால்டனின் மகன் நரேனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைப் பார்த்த நிக்கோலஸ் ராஜரத்தினம், சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து டால்டன் வீட்டிலிருந்து ஓடி வந்து செந்தில்குமாரை தடுக்க முயன்றபோது, அவரையும் செந்தில்குமார் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தக் கொலைச் சம்பவத்தின்போது செந்தில்குமாருக்குக் காயம் ஏற்பட்டதால், அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், செந்தில்குமாரைக் கைது செய்த போலீசார், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி ரஞ்சிதாவையும் கைது செய்தனர்.