நேப்பாள வெள்ளம் தொடர்பில் இணையத்தில் கருத்துகள்; ஐவரிடம் விசாரணை
நேப்பாளத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளம், ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) முதலீடு செய்தது ஆகியவற்றின் தொடர்பில் இணையத்தில் இனவாதக் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை ஐவரை அடையாளம் கண்டு அவர்களை விசாரித்துள்ளது.
அந்த ஐவரும் 29லிருந்து 66 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை புதன்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்தது.
“இணையத்தில் தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்துகள் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அவற்றுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்போம்,” என்று காவல்துறை கூறியது.
“இனரீதியான உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய அல்லது வெறுப்பைத் தூண்டக்கூடிய, இனங்களுக்கிடையே கசப்பான உணர்வை எழுப்பக்கூடிய நடத்தையைக் காவல்துறை மிகுந்த அக்கறையுடன் கையாளும்,” என்றும் காவல்துறை குறிப்பிட்டது. விசாரணை தொடர்வதால் தனிப்பட்ட நபர்களைப் பற்றித் தங்களால் தகவல் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.