📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 15, 2026 10:34 PM

மூக்குத்தி அம்மன் 2வா.. இல்ல அரண்மனை 5ஆ? சொதப்பலான சிஜி.. டீசரை கலாய்க்கும் ரசிகர்கள்!

மூக்குத்தி அம்மன் 2வா.. இல்ல அரண்மனை 5ஆ? சொதப்பலான சிஜி.. டீசரை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் 2. இந்த திரைப்படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டீசர் இன்று வெளியான நிலையில், கிராபிக்ஸ் காட்சி படுமோசமாக இருப்பதாக இணையத்தில் மோசமான ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, மைனா நந்தினி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மூக்குத்தி அம்மன் 2வா? அரண்மனை 5?: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசரை பார்த்த ரசிகர்கள், அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகளாகவே இருப்பதாகவும், காட்சிகளில் சிஜி வேலைப்பாடுகள் மிகவும் செயற்கையாக தெரிகிறது என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அம்மன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இயல்பாக இல்லாமல் ஒரு பொம்மை படம் பார்ப்பது போல இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். இது மூக்குத்தி அம்மன் 2-வா? இல்லை அரண்மனை 5-ஆ?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆர்.ஜே. பாலாஜி கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். சுந்தர்.சி அரண்மனை 5 என்று நினைத்து இந்த படத்தை எடுத்துவிட்டாரா? என்று சிலர் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மோசமான கிராபிக்ஸ்: ரசிகர்கள் கூறுவது போலவே, டீசரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் செயற்கையாக தெரிகிறது. அதேபோல படத்தின் வசனங்களும் இயல்பான தமிழ்பட வசனங்களை போல இல்லாமல், டப்பிங் செய்யப்பட்ட ஒரு படத்திற்கு எப்படி வசனங்கள் இருக்குமோ அதே பாணியில் இருப்பதாக இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசர், தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.