முதல்வர் விஜய்க்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பிரசாதம்
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் செப்., 17ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் விஜய்க்கு நேரில் வழங்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் முதல்வர் விஜய்க்கு பிரசாதை்தை வழங்கினார். அப்போது, முதலமைச்சர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். கும்பாபிஷேக நிறைவை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,18 முதல் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப ...
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. வடலூர் ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் சூப்பர் எல்-நினோ ...
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு புகழ்பெற்ற ...
சிவகங்கை: மதகுபட்டி அருகே உள்ள ஏரியூரில் 700 ஆண்டு ...
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ...