📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 04:03 PM

மதுராந்தகம் இடைத்தேர்தலில் இதுவரை 893 தபால் வாக்குகள் பதிவு

மதுராந்தகம் இடைத்தேர்தலில் இதுவரை 893 தபால் வாக்குகள் பதிவு

கோப்புப் படம்

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தபால் வாக்குகளாக இதுவரை 893 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்-6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட தேர்தல் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தபால் வாக்குகள் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக, மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மூலம், மேற்கண்ட தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் உள்பட 931 வாக்காளர்கள் தபால் வாக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு குழுவினர் 85 வயது மேற்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 29-ம் தேதி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 893 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.