📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 22, 2026 11:06 PM

மதுபோதையில் கார் ஓட்டி அடுத்தடுத்து 10

மதுபோதையில் கார் ஓட்டி அடுத்தடுத்து 10

மதுபோதையில் கார் ஓட்டி அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர் கைது!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த 25 வயதான தாமோதரன், தனது நண்பரின் காரை எடுத்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்தில் வந்த நண்பரை அழைத்து வருவதற்காக புதுக்கோட்டை வழியாக திருச்சி நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது தாமோதரன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பேராங்குளம் அருகே உள்ள தேவாலயம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது முதலில் மோதியது.

இதையடுத்து, அண்ணா சிலை வழியாக குழுந்தாங்குளம் சாலையில் சென்ற தாமோதரன், அங்குள்ள பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது காரை மோதி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், வேன் மார்க்கெட் வழியாக காரை தொடர்ந்து இயக்கியபோது, அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, மதுபோதையில் இருந்த தாமோதரனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை நகர போலீசார், தாமோதரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாமோதரன் அடுத்தடுத்து பல வாகனங்களில் மோதியதில், சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.