📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 12:04 AM

முதல்வரை கிண்டல் செய்வது நல்லதல்ல; அமைச்சர் மரிய வில்சன் கோபம்

முதல்வரை கிண்டல் செய்வது நல்லதல்ல; அமைச்சர் மரிய வில்சன் கோபம்

சென்னை: முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதை, கிண்டல் செய்வது நல்லதல்ல என, நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி., பகுதியில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

பின், மரிய வில்சன் அளித்த பேட்டி:

திமுக முன்னாள் எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய பேருந்து நிலையத்தை, போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன் திறந்து வைத்துள்ளார். மற்றவர் திட்டத்தில் பெயர் எடுக்க எங்களுக்கு விருப்பமில்லை. மேயர், எம்பி., முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்தோம்; வரவில்லை.

'வீ தி லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை, பாஜவில் தமிழக தலைவராகவும், ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்தவர். அவரிடமிருந்து, முதல்வர் விஜயின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வந்த கருத்துக்கள் நல்லதல்ல.

இன்றைய நிலையில், 1 ரூபாய் கூட முதலீடு தான்; அதை எப்படி உதாசீனப்படுத்த முடியும். முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதை, கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் வரி வருவாய் 96 ஆயிரத்து 567 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்டில் 1 லட்சத்து 9,104 கோடி ரூபாயாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஊழல் இல்லாத வரி வருவாயை, முதல்வர் விஜய் வெற்றிகரமாக பெருக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் மொத்த வருவாய், 1 லட்சத்து 8,460 கோடி ரூபாயாக இருந்தது; தற்போது, 1 லட்சத்து 17 ஆயிரத்து 790 கோடியாக 8.6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடன் 19 சதவீதம் குறைந்துள்ளது. இனி, மாதந்தோறும் அறிக்கை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.