📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 29, 2026 01:03 AM

மத்திய பிரதேசத்தில் 600 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிக்க முயற்சி

மத்திய பிரதேசத்தில் 600 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிக்க முயற்சி

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெறவுள்ள கும்பமேளா விழா விற்கான சாலை விரிவாக்கப்பணி களின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க 600 ஆண்டு பழமையான ஷாஹி மசூதியை இடிக்க முயன்ற அதிகாரிகளை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கற்கள் வீசப் பட்டதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுத் தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்

சிம் ராஸ்தா கும்பமேளா

இந்த விரிவாக்க பணிகளுக்காக உஜ்ஜைனில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட 272 கட்டுமானங்களை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் உஜ்ஜைனில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியும் அடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மசூதியை இடிக்காமல் அதற்கு எதிரே உள்ள கட்டடங்களை அகற்றிச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவியதுடன், ஏராளமான காவலர்களும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்காக அதிகாரிகள் வந்தபோது, அங்கு திரண்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வீச்சுத்தாக்குதல்