📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 11, 2026 07:33 AM

‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: மிசா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டது குறித்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் பேசி​யதற்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் விளக்​கம் அளித்​துள்​ளார். “இன்​றைக்​கும் நான் அடி​வாங்​கிய தழும்​பு​கள் எனக்கு இருக்​கின்​றன. யார் கொச்​சைப்​படுத்​தி​னாலும் வரலாற்றை மாற்ற முடி​யாது” என்று அவர் தெரி​வித்​துள்​ளார்​.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: எமர்​ஜென்சி காலத்​தில் மிசா சட்​டத்தை கருணாநிதி எதிர்த்​த​தால், அன்​றிருந்த மத்​திய அரசு திமுக ஆட்​சி​யைக் கலைத்​தது. உடனடி​யாக, மிசா சட்​டத்​தில் என்​னைக் கைது செய்​வதற்​காக கோபாலபுரம் வீட்​டுக்கு போலீ​ஸார் வந்​தனர்.

அன்று நான் வீட்​டில் இல்​லை. ‘பிரச்​சா​ரத்​துக்கு போயிருக்​கி​றான், நாளைக்கு வந்​து​விடு​வான், வந்​ததும் நானே போன் பண்​ணுகிறேன்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்​பி​விட்​டார்.

அடுத்த நாள் நான் வந்​ததும், அவரே போலீ​ஸிடம் கைது செய்ய சொல்​லி​விட்​டார். சிறை​யில் எனக்​குப் பல கொடுமை​கள் நடந்​தன. எங்​களை தொழுநோ​யாளி​கள் இருக்​கிற ஒரு சிறிய அறைக்​குள்​ளே, 10 பேரை அடைத்து வைத்​தார்​கள்.

ஒரு பானை​யில்​தான் அனை​வ​ரும் சிறுநீர் கழிக்க வேண்​டும். துர்​நாற்​றம் வீசும் அந்த இடத்​தில்​தான் நாங்​கள் தூங்க வேண்​டும். இரவில் தூங்​க​வி​டா​மல் லத்​தி​யால் போலீ​ஸார் அடிப்​பார்​கள், பூட்ஸ் காலால் மிதிப்​பார்​கள்.

இன்​னொரு பக்​கம் ஆயுள் தண்​டனை கைதி​களை வைத்​தும் எங்​களை கொடூர​மாக அடிப்​பார்​கள். அதில், எம்​.பி. சிட்​டி​பாபு சிறை​யிலேயே இறந்​து​போ​னார். என் தாடை எலும்பு உடைந்​து​விட்​டது.

நீங்​கள்​கூட கைவைத்து தாடையைக் காண்​பித்​தீர்​கள் அல்​ல​வா, அது உண்​மை​தான். இன்​றைக்​கும் நான் அடி​வாங்​கிய தழும்​பு​கள் எனக்கு இருக்​கின்​றன. யார் என்​னைக் கொச்​சைப்​படுத்​தி​னாலும் வரலாற்றை மாற்​றவே முடி​யாது.

சர்க்காரியா கமிஷன்

சர்க்​காரியா கமிஷன் அமைக்​கப்​பட்​டதற்​குப் பிறகு மத்​தி​யிலும், மாநிலத்​தி​லும் பலமுறை ஆட்​சிகள் மாறின. குற்​றச்​சாட்​டு​களில் உண்மை இருந்​திருந்​தால் கண்​டிப்​பாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டிருக்​கும். அரசி​யலுக்​காக கருணாநிதி மீது காழ்ப்​புணர்ச்சி கொண்​ட​வர்​கள் சொன்ன பொய்யை நீங்​களும் சொல்​லிக்​கொண்​டிருக்​கிறீர்​கள்.

அதே​போல், அமலாக்​கத்துறை கடிதத்தை எடுத்​துக்​கொண்​டு, அதில் எங்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் இருப்​ப​தாகச் சொல்​கிறீர்​கள்.

அமலாக்​கத் ​துறை குற்​றம்​சாட்​டிய 95 சதவீத வழக்​கு​களில் இது​வரை குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​ப​டா​மல், குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். பெரும்​பாலும் அரசி​யல் பழி​வாங்​கலுக்​காகவே அமலாக்​கத்​துறை ஏவப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைக்கு என மாண்​பும், மரி​யாதை​யும் இருக்​கிறது. பல பெரும் தலை​வர்​கள், மாமனிதர்​கள் தமி​ழ​கத்​தைச் செதுக்​கிய இடம் அது. எனவே, தேவை​யில்​லாத சர்ச்​சைகளை அங்கு பேச வேண்​டாம். நீங்​கள் முதல்வ​ரானதும் என்​னைச் சந்​திக்க வந்​தீர்​கள்.

அப்​போது, “தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் உங்​களை ரொம்ப விமர்​சித்து பேசி​விட்​டேன், ஐ அம் சாரி சார்” என்​றீர்​கள். அதற்கு நான், “பர​வா​யில்லை பிரதர், அதையெல்​லாம் மனசில் வைத்​துக்​கொள்​ள​வில்​லை; நீங்​கள் இப்​போது ஒரு மாநிலத்​தின் முதல்​வர், யாரைப் பற்றி பேசும்​போதும் கண்​ணி​யத்​தோடு பேசுங்​கள்” என்​றேன். அதையெல்​லாம் மறந்​து​விட்​டீர்​கள்.

சட்​டப் பேர​வையையே ரீல்ஸ் எடுக்​கும் இடமாக மாற்​று​வது, நாங்​கள் கட்​டிய பாலத்​தின் மேலே நின்று போட்​டோஷூட் பண்​ணுவது என்று ஆட்சி நிர்​வாகத்​தை​யும் சினிமா ஷூட்​டிங் மாதிரியே நடத்​துகிறீர்​கள். உங்​களு​டைய திற​னற்ற நிர்​வாகத்தை மறைக்க இப்​படி வித​வித​மாக ரீல்ஸ் போட்டு ஒரு தலை​முறையையே ஏமாற்​றிக் கொண்​டிருக்​கிறீர்​கள்.

ஆனால் உண்மை என்ன? உங்​கள் ஆட்​சி​யில் தின​மும் கொலை, திருட்​டு, பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் என்று சட்​டம் - ஒழுங்கு படு​குழி​யில் இருக்​கிறது. பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை ரத்து பண்​ணி, தமி​ழ​கத்​தின் வளர்ச்​சியை 15 வருஷம் பின்​னோக்கி கொண்​டு ​போ​யிருக்​கிறீர்​கள்.

விவ​சா​யிகளுக்கு முழு​மை​யான கடன் தள்​ளு​படி, அனைத்​துக் குடும்​பங்​களுக்​கும் ஆண்​டுக்கு 6 சிலிண்​டர், மகளிர் உரிமைத்​ தொகை ரூ.2,500 என பல வாக்​குறு​தி​களை நிறை​வேற்​ற​வில்​லை. ஆட்​சியை இழப்​பதை திமுக என்​றுமே தோல்​வி​யாக நினைத்​தது இல்​லை. ஒரு நாண​யத்​துக்கு இரண்டு பக்​கங்​கள் இருப்​பது போல, இதை மக்​கள் பணி​யின் இன்​னொரு முக​மாகத்​தான் நான் பார்க்​கிறேன்.

ஆட்​சி​யில் இருக்​கி​றோமோ இல்​லை​யோ, என்​றுமே தமி​ழ​கத்​தின் உரிமைக்​காக​வும், வளர்ச்​சிக்​காக​வும் மக்​களுக்​காக​வும் சண்டை செய்​து​கொண்டே இருக்க வேண்​டும்.

அவர்​கள் தாத்​​தாவுக்​​காகச் சண்டை செய்​தோம், அவர்​கள் அப்​​பாவுக்​​காகச் சண்டை செய்​தோம், இப்​போது அவர்​களுக்​​காகவே சண்டை செய்​வோம். இது​தான் திமுக​வின் வரலாறு. அந்த வரலாறு எப்​போதுமே மாறாது, மாற​வும் கூடாது. இவ்​​வாறு ஸ்டாலின் தெரிவித்​துள்​ளார்.