📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 30, 2026 07:03 AM

மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு; தீர்ப்பை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு; தீர்ப்பை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: மேகமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிகள் அனைத்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வருவதாக கூறி, பட்டா இல்லாமல் வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்நடவடிக்கைக்கு 98 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடமலைக்குண்டு பஸ் நிலையம் பகுதியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் காரணமாக, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மேகமலை வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம், மேகமலையில் இலவம்பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என்று கூறி உள்ளது.