📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 11:01 AM

கயாடு லோஹரின் கவர்ச்சி.. 'இம்மார்ட்டல்' படம் இளசுகளுக்கு பிடிக்கும்.. பயில்வான் விமர்சனம்!

கயாடு லோஹரின் கவர்ச்சி.. 'இம்மார்ட்டல்' படம் இளசுகளுக்கு பிடிக்கும்.. பயில்வான் விமர்சனம்!

சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள இம்மார்ட்டல் திரைப்படம். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்.

இம்மார்ட்டல் கதை: படத்தின் கதை ஜீவி பிரகாஷ் தனது மாமா வைத்திருக்கிற பிரிண்டிங் பிரஸ்ஸில் தங்கி வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறார். மாமாவிற்கு பண பிரச்சனை ஏற்படுவதால் அங்கு தங்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தான் கயாடுவை சந்திக்கிறார் ஜீவி. பெரிய பிரம்மாண்டமான ஃப்ளாட் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரை வாடகை போகும். ஆனால், ஜீ.வி. பிரகாஷ்குமாருக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு கயாடு வாடகை விடுகிறார். ஒருபக்கம் குறைந்த வாடகை, இன்னொரு பக்கம் அழகான பெண். இதனால் ஜீ.வி. பிரகாஷ்குமார் அந்த ஃப்ளாட்டில் தங்குகிறார். நாளாக நாளாக இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஜீவிக்கு காயடு மீது காதல் ஏற்படுகிறது.

1000 ஆண்டு மர்மம்: ஆனால் இந்த படத்தின் கதைக்குள் இன்னொரு மிகப்பெரிய மர்மமும் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு வில்லன் ஒரு குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்து, அந்த குழந்தையை மலையின் மீது விட்டு செல்கிறான். ஆனால், அந்த குழந்தை சாதாரண குழந்தை கிடையாது. அது ஒரு ஏலியன். தன்னை தானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியும் அந்த குழந்தைக்கு இருப்பதால், அந்த ஏலியன் குழந்தை தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்கிறது.

வீட்டில் நடந்த அந்த சம்பவம்: மற்றொரு பக்கம் ஃபிளாட்டி கயாடுவின் தாதாவிற்கு பிசியோதெரபி செய்வதற்காக ஒருவர் அங்கு வருகிறார். அவருக்கும் கயாடு மீது காதல் ஏற்படுகிறது. இதனால் அந்த ஃப்ளாட்டுக்குள் பல மர்மமான விஷயங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஜீ.வி. பிரகாஷ்குமார் அந்த ஃப்ளாட்டிற்குள் சிக்கிக்கொண்டோம் என்பது தெரிகிறது. இதில் இருந்து ஜீவி எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை.

இளசுகளுக்கு பிடிக்கும்: கயாடு லோஹர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு, படத்தில் அதீத கவர்ச்சி காட்டி இருக்கிறார். அவருடைய தோற்றம், உடைகள், உடல் மொழி, பார்வை என எல்லாமே ரசிகர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கு. அதே நேரத்தில் எந்த ஆபாசமாக காட்சியும் இல்லாமல் கவர்ச்சியான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ்குமார் - யோகருக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கு. குறிப்பாக இருவரும் நெருக்கமாக வரும் காட்சிகள், காதல் காட்சிகள் என இளசுகளை கவரும் வகையில் நிறைய காட்சிகள் இருக்கு.

படம் நல்லா இருக்கு: ஜீ.வி. பிரகாஷ் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார். காதலிக்கும்போதும், கயாடுவுடன் நெருக்கமாக இருக்கும்போதும் அவருடைய நடிப்பு இயல்பாக எதார்த்தமாக உள்ளது. முக்கியமாக படத்துல திரில்லர் காட்சிகளும் நிறைய இருக்கு. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு என்ன நடக்கப்போகுது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துற மாதிரி படத்தை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். மொத்தத்தில் பார்த்தால், 'இம்மார்ட்டல்' ஒரு வித்தியாசமான முயற்சி. திரில்லர், காதல், கவர்ச்சி என மூன்றையும் கலந்து ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.