📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 09:01 AM

Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!

Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!

சென்னை: ஜி.வி. பிரகாஷ் நடித்த படங்களிலேயே அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை தந்த படங்களாக டார்லிங், பேச்சுலர் படங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், தொடர்ந்து விடாமுயற்சி செய்து ஹீரோவாக நடித்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு கடந்த வாரம் கயாடு லோஹர் கருணையால் மீண்டும் ஒரு ஹிட் பார்சல் ஆகியுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வெற்றிப் படமாகவும் இம்மார்ட்டல் திரைப்படம் பார்க்கப்படுகிறது. மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஹாரர் படமாக வெளியான இம்மார்ட்டல் படத்தில் மஹி எனும் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க, 4000 ஆண்டுகள் சாகவரத்துடன் வாழும் வாம்பயராக கயாடு லோஹர் நடித்துள்ளார்.

படத்தின் காட்சிகள் எங்கேயும் திசை திரும்பாமலும் போர் அடிக்காத வகையில் இருந்த நிலையில், கோலிவுட்டின் அப்செஷன் என்றே ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

இம்மார்ட்டல் 3 நாள் வசூல்: கடந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் இம்மார்ட்டல் திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்குப் போட்டியாக துல்கர் சல்மானின் ஐ ஆம் கேம், பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழ் டப்பிங் உள்ளிட்ட படங்களும் கடந்த வாரம் வெளியாகின. இம்மார்ட்டல் முதல் நாளிலேயே பாசிட்டிவ் மவுத் டாக் வந்த நிலையில், 2வது நாளில் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்தது. முதல் 3 நாட்களில் இதுவரை 5.23 கோடி கிராஸ் வசூலை கடந்துள்ளது என்றும் 4.51 கோடி நெட் வசல் நிலை என்றும் சாக்னிக் அறிவித்துள்ளது.

பேச்சுலர் வசூல் எவ்வளவு?: ஜி.வி. பிரகாஷ் நடித்து கடைசியாக ஹிட் அடித்த பேச்சுலர் திரைப்படம் அதிகபட்சமாக 6.2 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது. இந்நிலையில், இம்மார்ட்டல் திரைப்படம் இன்றே பேச்சுலர் படத்தின் வசூலை கடந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரமும் இம்மார்ட்டல் திரைப்படம் இதே வேகத்தில் ஓடும் என்றும் அதிகபட்சமாக 10 கோடிக்கு அதிக வசூலை பெற்று நயன்தாரா - கவின் நடித்த ஹாய் படத்தை போல பாக்ஸ் ஆபீஸில் பாஸ் மார்க் வாங்கிய படமாக மாறும் என்கின்றனர்.

கயாடு லோஹர் கருணை: ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து ஏகப்பட்ட ஹீரோயின்களை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய மமிதா பைஜு மலையாளத்தின் மூன்றாவது M என்கிற அளவுக்கு மோகன்லால், மம்மூட்டிக்கு நிகராக கொண்டாடப்படும் அளவுக்கு பிரேமலு, பெத்லகேம் யூனிட் படங்கள் மூலம் விஸ்வரூபம் எடுத்து விட்டார். அதே போல கயாடு லோஹரின் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு இம்மார்ட்டல் வெற்றிப் படமாக மாறியுள்ளது என்கின்றனர்.