குதிரைபேரம் மூலம் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியிருக்கும் விஜய் A1 குற்றவாளி.!! திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு
குதிரைபேரம் மூலம் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியிருக்கும் விஜய் A1 குற்றவாளி.!! திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு
சென்னை: தற்போது முதலமைச்சராக விஜய் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியின் 4 கால்களும் ஊழல் தான் என மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் குற்றம்சாட்டி உள்ளார். மதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து எம்எல்ஏ ஆன ராஜேந்திரன், செந்தில் செல்வனுக்கு பதவியை ராஜினாமா செய்ய தவெக தரப்பு நெருக்கடி கொடுப்பதாக சாடி உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், தவெக தரப்பின் நெருக்கடி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் குறிப்பிட்ட 2 எம்எல்ஏ-க்களும் புகார் அளித்துள்ளனர். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2 எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பது குறித்து வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
எப்படியாவது பேசி இந்த 2 எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதாக வைகோ, விஜய்யிடம் உறுதி அளித்துள்ளார். 2 எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய கூட்டு சதி நடைபெறுகிறது. அவர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக வைகோ முதல்வருக்கு உறுதி அளித்ததற்கு அந்த எம்.எல்.ஏக்களே சாட்சி, எனவே தவெக ஆட்சியே ஊழலில் தான் நடக்கிறது என்றார் பரந்தாமன். வெளிக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை உருவாக்கி, தான் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்கிற முயற்சியில் தான் விஜய் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
எனவே அந்த 2 எம்எல்ஏ-க்கள் கொடுத்துள்ள புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும். கட்சித் தாவல் விவகாரத்தில் டிடிவி தினகரன், அதிமுக தரப்பு கொடுத்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் வழக்கு பதியவில்லை? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
குதிரைபேரம் மூலம் விஜய் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார். இதில் விஜய்யை A1 குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். காவல்துறையினர் கண்மூடி இருக்காதீர்கள்; மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க சட்டத்துறை சும்மா இருக்காது என்று எச்சரித்துள்ளார்.