📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 10:04 PM

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு பல்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு பல்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு

சென்னை: சென்னை எம்​ஜிஎம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்​டுள்ள கொளத்​தூர் தொகுதி தவெக எம்​எல்ஏ வி.எஸ்.​பாபுவுக்கு பல்​துறை மருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்து வரு​கின்​றனர்.

சென்னை கொளத்​தூர் தொகுதி தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு. அந்த தொகு​தி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழு​வதும் அவர் பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த மாதம் 9-ம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​டுள்ள அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். கடந்த 23-ம் தேதி முதல்​வர் விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

மேலும், அவருக்கு அளிக்​கப்​படும் சிகிச்​சைகள் குறித்​தும், உடல்நிலை முன்​னேற்​றம் குறித்​தும் மருத்​து​வர்​களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்​.​பாபு உடல்​நிலை குறித்து சமூக வலைதளங்​களில் அவ்​வப்​போது பல்​வேறு தகவல்​கள் வெளி​யாகி வந்​த​தால், மருத்​து​வ​மனை நிர்​வாகம் அதி​காரப்​பூர்​வ​மாக அவரது உடல்​நிலை அறிக்​கைகளை வெளி​யிட்டு வந்​தது. ஆனால், கடந்த 10 நாட்​களுக்கு மேலாக அறிக்​கைகள் வெளி​யா​காத​தால், மீண்டும் அவரது உடல்​நிலை குறித்து பல்​வேறு தகவல்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வரு​கின்​றன.

இதற்​கிடை​யில், வி.எஸ்​.​பாபு சுவாசிக்க உதவி​யாக கழுத்​துப் பகுதி​யில் டிரக்​கி​யாஸ்​டமி கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யான​தால், அது தொடர்​பாக அவரது தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அது​போன்று எந்​தக் கரு​வி​யும் பொருத்​தப்​பட​வில்​லை. வி.எஸ்​.​பாபு நலமுடன் உள்​ளார்” என்றனர்.