கல்லூரி, நூலகங்களுக்கு புத்தகங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தன்னை நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களை கல்லூரி, நூலகங்களுக்கு நேற்று மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள் அவருக்கு அளித்த புத்தகங்களை தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;
மதுரை, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரிக்கு 1,000 புத்தகங்கள்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரமகேந்திரகோட்டை புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகத்திற்கு 1,000 புத்தகங்கள்-கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், தந்தை பெரியார் திராவிடர் கழக நூலகத்திற்கு 500 புத்தகங்கள்- தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் அணிக்கு 2,000 புத்தகங்கள்-வேலூர் மாவட்டம்,
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக நூலகத்திற்கு 1,000 புத்தகங்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மேல்வசலை கிராமம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்திற்கு 1,000 புத்தகங்கள் என மொத்தம் 6,500 புத்தகங்களை நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.