📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 04:03 PM

ஜனநாயகத்தை இழிவுபடுத்திய சத்தியபாமா விஜய் செய்த குதிரை பேர திருவிளையாடல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கடும் தாக்கு

ஜனநாயகத்தை இழிவுபடுத்திய சத்தியபாமா விஜய் செய்த குதிரை பேர திருவிளையாடல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கடும் தாக்கு

ஜனநாயகத்தை இழிவுபடுத்திய சத்தியபாமா விஜய் செய்த குதிரை பேர திருவிளையாடல்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கடும் தாக்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா 20 தினங்களுக்குள்ளாக பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் மீண்டும் சத்தியபாமா தவெக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நேற்று முன்தினம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, சத்தியபாமா பேசி கொண்டிருந்தபோது பின்னால் நின்றிருந்த அமைச்சர் ராஜ்மோகன் அவரது கேட்தில் ஏதோ சொல்ல உடனே கண்ணீர் விட்டபடி சத்தியபாமா பேசினார். உடனே முதல்வர் விஜய் அவரது தோளில் கையை போட்டு ஆறுதல் சொன்னார். இதற்கு எதென்ன உலக மகா நடிப்புடா என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருப்பூர் எம்பியுமா சுப்பராயன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பொதுக்கூட்ட மேடைகளும் சினிமா படப்பிடிப்பு மையங்களாக்கப்பட்டு வருவதை, தாராபுரம் தவெக மேடையில் தமிழ்நாடு கண்டது. எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை அனுமதிக்கவே முடியாது. அதே நேரத்தில் ஜனநாயக அரசியல் அமைப்பின் சாரத்தை, ஒரு பெண் எம்எல்ஏ இழிவுபடுத்தியதை எப்படி ஏற்க முடியும்? தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, எம்எல்ஏ பதவியை ஏன் உடனே ராஜினாமா செய்தார்?

ராஜினாமா செய்த வேகத்திலேயே தவெகவில் ஏன் சேர்ந்தார்? தவெகவின் எந்தக் கொள்கை அவரை அவ்வளவு வேகமாக ஈர்த்தது? சத்தியபாமாவுக்கு, வாக்களித்த தாராபுரம் தொகுதி மக்கள் முன் குற்றவாளியாக நிற்கிறார். அவரை ராஜினாமா செய்ய வைத்து ஜனநாயக விரோதக்குற்றவாளி ஆக்கியது முதல்வர் விஜய் செய்த குதிரை பேரத்திருவிளையாடல்! சத்தியபாமாவும், முதல்வர் விஜயும்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்!. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.