📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 02, 2026 07:04 PM

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 15வது தங்கம்: பதக்கப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 15வது தங்கம்: பதக்கப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது.

குத்துச்சண்டை

மல்யுத்தத்தில் முதல் தங்கம்

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்திய வீரர் சுஜித் கல்கல் , 65 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். தஜகிஸ்தானின் அப்துல் மஜித் குடியேவை 10- 9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார்.

வில்வித்தை இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அங்கிதா, அகிர்தி, குக்கும் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வென்றுள்ளது. வில்வித்தை பிரிவில் மட்டும் இந்தியா இதுவரை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது; இறுதிப்போட்டியில் இந்தியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி சீனா தங்கம் வென்றது. தீராஜ், கும்கும் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

பதக்கப்பட்டியல்

இந்தியா இதுவரை, 75 பதக்கங்களை வென்று பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.