Jailer 2 X Review: ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு?.. நெல்சன் சம்பவம்.. ட்விட்டர் விமர்சனம் தூள்!
சென்னை: குடையுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுக்கும் தரமான இன்ட்ரோ காட்சியில் இருந்தே படம் பட்டாசாகவும் முதல் பாதி காமெடி காட்சிகள் நிறைந்து கலகலப்பாக செல்வதாகவும் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்த ரசிகர்கள் சில வீடியோ க்ளிம்ப்ஸ்களுடனே சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ட்விட்டர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சில படங்களை தவிர்த்து பொதுவாகவே தமிழ் சினிமாவில் 2ம் பாகம் என்றாலே அது ஒரு சாபம் என பார்க்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் சுக்குநூறாக ஜெயிலர் 2 உடைத்துள்ளதாக ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
முதல் பாதியில் மூர்த்தி கதாபாத்திரத்தை வைத்து நெல்சன் செய்துள்ள சம்பவம் தான் அல்டிமேட் என்றும் டாக்டர் பட பாணியில் ஜெயிலர் 2வில் ஏகப்பட்ட டார்க் காமெடிகளை வைத்து நெல்சன் சிரிக்கவும் கொண்டாடவும் வைத்துள்ளார். ரொம்பவே அப்பாவியான முத்துவேல் கதாபாத்திரத்திலும் டைகர் முத்துவேல் பாண்டியனாக கர்ஜிக்கும் இடத்தில் சூப்பர் ஸ்டார் சூர சம்பவம் செய்துள்ளார் என ரசிகர்கள் ஜெயிலர் 2 படம் பிளாக்பஸ்டர் டா கண்ணா என அடித்துச் சொல்கின்றனர்.
கொண்டாட்டங்களுடன் வெளியானது ஜெயிலர் 2: கேரளா, கர்நாடகா, அமெரிக்கா, கனடா என ஏகப்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே ஜெயிலர் 2 திரைப்படம் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் கோலாகலமாக கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் இன்ட்ரோ டைட்டில் ஒன் சன் ஒன் மூன் என அட்டகாசமாக புதிய டிசைன் உடன் திரையில் தோன்றியதுமே ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
வேறமாறி ஹுகும்: காலையிலேயே அமெரிக்காவில் இருந்து ஜெயிலர் 2 படத்தை பார்த்துவிட்ட கிறிஸ்டோபர் கனகராஜ் டாக்ஸிக் டார்ச்சர் என பதிவிடாமல் நெல்சூ வேறமாறி ஹுகும் என படத்தைக் கொண்டாடியுள்ளார். சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்ட், நெல்சன் ஸ்டைல் டார்க் காமெடி காட்சிகள், அந்த பாலத்தின் மேல் நடக்கும் மாஸான காட்சி, டீ கடை காட்சி மற்றும் இடைவேளை காட்சி என முதல் பாதியே மிரட்டலாக உள்ளது. பிளாக்பஸ்டர் ஜெயிலர் 2 என விமர்சித்துள்ளார்.
வெங்கி விமர்சனம்: பிரபல டோலிவுட் விமர்சகரும் பல படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனத்தையே கொட்டுவார். ஆனால், ஜெயிலர் 2 ஆரம்பம் ரொம்ப ஸ்லோவாக இருந்தாலும், நெல்சன் ஸ்டைல் காமெடி காட்சிகள் க்ளிக் ஆகின்றன. ரஜினிகாந்தின் எலிவேஷன் காட்சிகள் பிக்கான உடன் முதல் பாதி படம் சாலிட் கமர்ஷியல் படமாக ரசித்து பார்க்க வைப்பதாக இவரே பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்து விட்டார். ஆல் ஏரியாவிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கிய நிலையில், தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி பிளாக்பஸ்டர் படமாக ஜெயிலர் 2 மாறுமா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. தொடர்ந்து 7 நாட்கள் வசூலை அள்ள வாய்ப்புகள் உள்ள நிலையில், அது சாத்தியமே என்கின்றனர்.