📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 03:03 PM

இடைத்தேர்தலில் கடும் பின்னடைவு; இருதொகுதியிலும் கம்யூனிஸ்ட் கதை கந்தல்

இடைத்தேர்தலில் கடும் பின்னடைவு; இருதொகுதியிலும் கம்யூனிஸ்ட் கதை கந்தல்

-நமது நிருபர்-

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், எதிர்பார்த்த படியே டிபாசிட் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி காமெடி செய்தனர்.

மதுராந்தகத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூ கட்சி சார்பில் லட்சுமணன் போட்டியிட்டனர். மக்கள் ஆதரவு இல்லாத அவர்களுக்கு, டிபாசிட் கூட கிடைக்காது என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். அதன்படியே அவர்களுக்கு டிபாசிட் கிடைக்காது என்று உறுதியாகியுள்ளது.

தற்போது, 11 சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி 1,068 ஓட்டுகளும், 17 சுற்று எண்ணிக்கை முடிவில், தாராபுரத்தில் கம்யூ., வேட்பாளர் லட்சுமணன் 949 ஓட்டும் மட்டுமே பெற்றுள்ளனர்.

தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட இல்லாமல், ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்ந்து கொண்டு எம்எல்ஏ., எம்.பி., பதவிகளை பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மையான பலம், இப்போது தான் மக்கள் மத்தியில் அம்பலமாகி உள்ளது' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.