📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 17, 2026 12:33 AM

“இந்தியாவில் ஆட மாட்டோம்”.. பாகிஸ்தான் ஹாக்கி அணி அடம்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஆட மறுப்பு

“இந்தியாவில் ஆட மாட்டோம்”.. பாகிஸ்தான் ஹாக்கி அணி அடம்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஆட மறுப்பு

“இந்தியாவில் ஆட மாட்டோம்”.. பாகிஸ்தான் ஹாக்கி அணி அடம்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஆட மறுப்பு

டெல்லி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் விளையாட பாகிஸ்தான் ஹாக்கி அணி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தொடரை இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் அல்லது தங்கள் போட்டிகளை பொதுவான வேறு நாட்டு மைதானத்தில் நடத்த வேண்டும் என்று ஆசிய ஹாக்கி கூட்டமைப்பிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஜலந்தர் நகரங்களில் வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், பல நாடுகள் பங்கேற்கும் தொடர் என்பதால் பாகிஸ்தான் அணி பஞ்சாபிற்கு வந்து விளையாடுவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத் தலைவர் மொஹியுதீன் அகமது வானி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான பாதுகாப்பு சூழலைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு வர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி போட்டிகளை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பது இது 3-வது முறையாகும். கடந்த 2025-ல் பீகாரில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் தமிழ்நாட்டில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஆகிய தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காமல் பின்வாங்கியது. சர்வதேச விதிகளின்படி பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வர அனுமதி உள்ள போதும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அடம் பிடித்து வருகிறது.

பாகிஸ்தான் அணி வராத பட்சத்தில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஓமன் அல்லது வங்கதேசம் இத்தொடரில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா அல்லாத பொதுவான மைதானத்தில் ஆட அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரி வந்தாலும், திட்டமிட்டபடி பஞ்சாபில் போட்டிகளை நடத்த ஹாக்கி அமைப்புகள் தயாராகி வருகின்றன.