இனிமே நாடோடிகள் நமோ நாராயணா இல்லை.. ஜெயிலர் 2 மூர்த்தி அண்ணன்.. வேறமாறி சரவெடி.. அந்த செஸ் சீன்!
சென்னை: ஹ்ரித்திக் ரோஷன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் விஜய் சேதுபதி என ஏகப்பட்ட கேமியோக்களும் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன் என பவர்ஃபுல் பெர்ஃமார்கள் பலரும் இருந்தாலும் ஜெயிலர் 2 படத்தைப் பார்த்த பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்து படத்தில் தங்களுக்கு பிடித்த கேரக்டர் யார் என்றால் அது நம்ம பழக்கடை அண்ணன் மூர்த்தி தான் என கொண்டாடி வருகின்றனர்.
நாடோடிகள் படத்தின் மூலம் நடிக்க வந்து முதல் படத்திலேயே பேனர் மூலம் பிரபலமான நமோ நாராயணா ஜெயிலர் 2 படத்தில் மேல ஒரு படி சென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
எங்க பாஸ் மூர்த்தி அண்ணனைத்தான் கேட்கணும் என அவருக்குப் பின்னாடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அண்டர்பிளே பண்ணி நடித்துள்ள நிலையில், வில்லன் சுராஜ் வெஞ்சரமூடுவுடன் நமோ நாராயணன் செஸ் விளையாடும் காட்சி எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
யாரு இந்த நமோ நாராயணா?: மதுரையில் பிறந்து வளர்ந்த நமோ நாராயணா சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சமுத்திரகனின் இயக்கத்தில் சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் நடித்து 2009ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் நமோ நாராயணா. ஈசன், முதல் இடம், போராளி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டி புலி, நிமிர்ந்து நில், கொம்பன், ரஜினி முருகன், மருது, கொடி, விஸ்வாசம், நாடோடிகள் 2, ராயன், கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
டீ கடை காமெடி முதல் செஸ் சீன் வரை: தன்னுடைய போட்டோவை டீ கடை ஒன்றில் மாட்டச் சொல்லி முடியாது என சொன்னவரை அலேக்காக தூக்கி வந்து வீட்டில் உள்ள தனது போட்டோவுக்கு கீழ் டீ கடையோடு கைது செய்த காட்சி முதல் வில்லன் சுராஜ் உடன் செஸ் ஆடும் சீன் என ஒவ்வொரு காட்சியிலும் பிளாஸ்ட் செய்து தியேட்டரையே தெறிக்கவிடுகிறார் நமோ நாராயணா. ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதியில் வரும் அந்த பாலம் காட்சியில் எல்லாம் எங்க பாஸ் வந்தா இப்படி சாஃப்ட்டா டீல் பண்ண மாட்டாரு என சூப்பர் ஸ்டார் நமோ நாராயணாவுக்கு கொடுக்கும் பில்டப் அந்த டீ கடையில் வரும் பாதாம்கீர் காமெடி என அதகளம் செய்துள்ளார்.