📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 14, 2026 11:03 PM

IND vs WI: முக்கிய கட்டத்தில் காலை வாரிய ஸ்ரேயாஸ்.. 247 ரன்கள் சேஸிங்கில் சொற்ப ரன்களில் கேப்டன் அவுட்

IND vs WI: முக்கிய கட்டத்தில் காலை வாரிய ஸ்ரேயாஸ்.. 247 ரன்கள் சேஸிங்கில் சொற்ப ரன்களில் கேப்டன்  அவுட்

IND vs WI: முக்கிய கட்டத்தில் காலை வாரிய ஸ்ரேயாஸ்.. 247 ரன்கள் சேஸிங்கில் சொற்ப ரன்களில் கேப்டன் அவுட்

ஹைதராபாத்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தபோது மைதானமே அமைதியானது. முதலில் பந்துவீசிய இந்திய அணி, 248 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கியது.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே இழந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய பொறுப்பில் இருந்தார். ஆனால், பெரிய ஷாட் அடிக்க முயன்று அவர் தனது விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

9-வது ஓவரின் இரண்டாவது பந்தில், ஷமார் ஜோசப் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஃபுல் லெங்த் பந்தை வீசினார். ஷ்ரேயஸ் அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க முயன்றபோது, பந்து ஸ்லைஸ் ஆகி டீப் பாயிண்ட் திசையை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த ஜுவல் ஆண்ட்ரூ அபாரமாக கேட்ச் பிடித்தார். 248 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை துரத்தும் போது இது போட்டியில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.

அதிரடியாக விளையாட முயன்ற ஸ்ரேயாஸ் 11 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 97/3 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒருமுறை பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினார். முந்தைய போட்டியை விட இதில் சற்று சிறப்பாகத் தெரிந்தாலும், மீண்டும் ஒருமுறை ஏமாற்றமே எஞ்சியது.

3-வது டி20 போட்டியில் அவர் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். பெரிய இலக்கை துரத்தும் இந்த முக்கியமான போட்டியில், அணியை முன்னின்று வழிநடத்த வேண்டிய கேப்டனால் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனது.

இந்தத் தொடரை வலதுகை பேட்டரான ஸ்ரேயாஸ் சிறப்பாக தான் தொடங்கினார். முதல் போட்டியில் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 237.21 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் 102* ரன்கள் விளாசி, தனது முதல் டி20 சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.

இரண்டாவது போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர், 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 222.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 40 ரன்கள் எடுத்தார். இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அந்த ஃபார்மை அவரால் தக்கவைக்க முடியவில்லை. நான்கு போட்டிகளின் முடிவில் அவர் 53.00 சராசரி மற்றும் 214.86 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 159 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டி20 போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் மீண்டும் ஃபார்முக்கு வர தீவிரமாக இருப்பார்.