4-வது டி
ஐதராபாத்: இந்திய அணிக்கு எதிரான 4வது டி-20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. . இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், இந்திய அணி 2--1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததால், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.
இந்திய அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நமன் தீர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவெல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், கீமோ பால், ஷமார் ஸ்பிரிங்கர், குடாகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப். ஆகியோர் உள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி,தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை பதம் பார்த்த கேப்டன் ஷாய் ஹோப், வெறும் 28 பந்துகளில் அதிரடி அரைசதம் கடந்தார்.
கேப்டன் ஷாய் ஹோப் அதிரடி சதம்:
50 பந்துகளை சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் சதம் (102) அடித்தார் . அவருடன் இணைந்து விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் 14 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரூதர்போர்ட், மயங்க் யாதவ் வீசிய 17-வது ஓவரில் மட்டும் 21 ரன்களை விளாசினார்.
முன்னதாக, ஷிம்ரான் ஹெட்மயர் 33 ரன்களும், ரோவ்மன் பவெல் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ரன் எடுத்தது.இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
248 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவசம் செய்து வெறும் 20 பந்துகளில் 50 ரன்களை (அரைசதம்) கடந்தார். 23 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 6 ரன்னுக்கு வெளியேறினார்.
248 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 56 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார். எனினும், மிடில் ஆர்டரில் திலக் வர்மா (43 ரன்கள்), நிதிஷ் குமார் ரெட்டி (41 ரன்கள்) ஆகியோர் போராடிய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியைத் தடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 போட்டிகள்(2-2) வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.