📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 10:01 AM

Immortal Day 1 Box Office

Immortal Day 1 Box Office

சென்னை: ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மாரியப்பன் சின்னா என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வசூலை பொறுத்தவரை டீசன்ட்டான நிலையிலேயே இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இதுவரை மொத்தம் மூன்று முறை தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இதற்கிடையே ஹீரோவாகும் ஆசை வந்துவிட; கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே ஹீரோவாக நடித்துவருகிறார். வித்தியாச வித்தியாச கதைகளில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றி இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேப்பி ராஜ்கூட சுமார் ஹிட்தான்.

இம்மார்ட்டல் ஜிவி பிரகாஷ்: இப்போது அவர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் ஆவலை ஏற்படுத்திய நிலையில், ஸ்பெஷல் ஸ்க்ரினீங்கிலும் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்தது. இந்த ஹைப்போடு நேற்று திரையரங்குகளில் படம் ரிலீஸானது. ரசிகர்களும் ஆவலோடு சென்று பார்த்தார்கள்.

படம் எப்படி?: படம் இதுவரை இந்தியாவில் வராத வாம்ப்பயர் ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கயாடு லோஹருக்கு இதுதான் முதல் படம். ஆனால் இந்தப் படம் தாமதமாக ரிலீஸானதால் டிராகன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகிவிட்டன. இதில் ஜிவி, கயாடு இடையேயான கெமிஸ்ட்ரி உண்மையில் சூப்பராகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. கயாடுவின் மைல்டான கவர்ச்சியும் படத்துக்கு உதவி செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் சுவாரஸ்யமாகத்தான் படத்தை கொடுத்திருக்கிறார்.

சிஜி பணிகள் அபாரம்: குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளைத்தான் ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்க்ள். பல இடங்களில் இது உண்மையா இல்லை சிஜியா என்று தெரியாத அளவுக்கு வேலை செய்திருந்தார்கள். இந்த சிஜி பணிக்காக மொத்தம் இரண்டு வருடங்கள் படக்குழுவினர் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் சாம் சி.எஸ்ஸின் இசையும் ஹாலிவுட் தரத்தில் இருந்தது. ஆகமொத்தம் வாம்ப்பயர் ஜானரில் வந்த இந்தப் படம் அனைவரையும் கவர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

வசூல் நிலவரம்: ஜிவி பிரகாஷுக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி படம்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, முதல் நாளான நேற்று 95 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும்; படத்துக்கு முதல் நாளே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததாலும் கண்டிப்பாக வசூல் மேற்கொண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.