Immortal Blue Sattai Maran Review
சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களுக்கு அந்தப் படம் போதுமான திருப்தியை கொடுத்திருக்கிறது. அது படக்குழுவுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோலிவுட்டின் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறர்.
ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மார்ட்டல். இதனை மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கிறார். சாமி சி.எஸ் இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படமானது திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
இம்மார்ட்டல் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் அந்த வீடியோவில், "1000 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதையை காட்டுகிறார்கள். பிறகு இப்போதைய காலத்துக்கு வருகிறார்கள். இதில் ஹீரோ ப்ரிண்ட்டிங் ப்ரெஸ் வைத்திருக்கிறார். அவர் ரூம் தேடுகிறார். ரூம் மட்டுமில்லை எதிரில் பெண் இருக்கிறாரா என்பத்பையும் சேர்த்து தேடுகிறார். அப்போது அவருக்கு ஒரு பெண் ஃபோன் செய்து என்னுடைய ரூமில் ஷேர் செய்து இருக்கிறீர்களா என கேட்கிறார். ஹீரோவும் அங்கே தங்குகிறார். பிறகு அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் கதை.
எப்படி இருக்கிறது படம்?: இந்தப் படத்தின் போஸ்டரையும், ட்ரெய்லரையும் பார்த்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் இது ஏலியன் தொடர்பான கதை என்பதை. முதல் பாதி கொஞ்சம் கொஞ்சமாக ஏலியன் குறித்து சொல்கிறார்கள். அது மெதுவாக இருந்தாலும் டீசன்ட்டாக இருந்தது. இரண்டாவது பாதியில் கதை முடிய வேண்டும். முடிய வேண்டும் என்றால் ஏலியனிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும் அல்லது அதை அழிக்க வேண்டும்.
கேலி செய்யும்படிதான் இருக்கு: ஏலியனின் வீக் பாயிண்ட்டை வைத்துதான் ஹீரோ அழிக்க முடியும். இதற்கு உலகத்தில் இருக்கும் எல்லா பவரும் இருக்கிறது. எதிராளி என்ன நினைக்கிறார் என்பதையும் அது புரிந்துகொள்கிறது. இதில் ஹீரோ வென்றார் என்று படம் எடுக்கிறார்கள். எனில், ஏலியனைவிட ஹீரோவுக்கு அதிக பவர் இருக்க வேண்டும். ஆனால் ஹீரோவுக்கு அப்படி எதுவும் இல்லை. ஏலியனை ஹீரோ அழிக்கும்போது கேலி செய்யும்படிதான் இருக்கிறது.
மேம்போக்காக: பெரிய சுவாரஸ்யமாக இல்லை. இவர்களுக்கு ஏத்த மாதிரி கதையை வளைத்து வளைத்து எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் ஏலியனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நமக்கு தோன்ற வேண்டும். அதெல்லாம் ரசிகர்களுக்கு தோன்றவே இல்லை. படத்தில் எந்த கேரக்டரும் ரசிக்கும்படி இல்லை. ஹீரோயின் வீட்டில் இருக்கும் தாத்தா கேரக்டர் ஒன்றுதான் ரசிக்கும்படி இருந்தது. மேம்போக்காகத்தான் எழுதியிருந்தார்கள்.
பார்ப்பவர்கள் சாக வேண்டும்: கேமரா ஒர்க் டீசன்ட்டாக இருந்தது. எடுக்கப்பட வேண்டிய கதைகளே ஆயிரம் நம் ஊரில் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு ஏலியன் கதைகளை எடுக்கிறேன் என்று போகிறார்கள். ஹாலிவ்ட் மாதிரி எடுக்க வேண்டும் என்றால் அதை விஞ்சும் அளவுக்கு கதை, திரைக்கதை இருக்க வேண்டும். ஆனால் இப்படி எடுத்தால் படம் பார்ப்பவர்கள்தான் சாக வேண்டும்" என்றார்.