"என் அன்புத் தம்பி விஜய்!"
வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!
திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி ,வழக்கம் போல் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை தினசரி விமர்சித்து வருகிறார். தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, தனது பாணியில் தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். அவரது பேச்சில் இந்த அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இருந்தது.
அவர் பேசியதாவது ,"ஆட்சிக்கு வரும் முன்னர் அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறி விஜய் ஆட்சியைப் பிடித்தார். இந்த ஆட்சியில் எதுவுமே சரியில்லை என்று ஓட்டு கேட்டார். நான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று கூறியிருந்தார். சினிமாவில் ஒரே நாளில் அனைத்தையும் மாற்றிக் காட்டுவார்கள் இல்லையா? அதேபோல் நிஜத்திலும் தான் மாற்றி காட்டுவேன் என்று கூறினார். இப்போது ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் எதை மாற்றி இருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் தொடர்ந்த கனிமொழி, "தினமும் சாயங்காலம் ஆனா, கரண்ட் கட் ஆகுதா? காலையிலும் கரெக்ட் கட் ஆகுதா? காலையிலும் கரண்ட் கட் , மாலையிலும் 3 முறை கரண்ட் கட், அந்த நேரத்தில் வீட்டில் உள்ள சகோதரிகளிடம் கேளுங்கள். முந்தைய திமுக ஆட்சியின் போது கரன்ட் கட் ஆனதா? என்று கேளுங்கள். ஆனால் இப்போது கரண்ட் கட் ஆனாலும் பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து உட்காரவே பயப்படுகிறார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் அந்த அளவிற்கு சீர்கெட்டு உள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தற்போது எனக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். என் அன்பு தம்பி விஜய், ஏனென்றால் என் அண்ணன் முக. ஸ்டாலின் அவருக்கு ஸ்வீட் அங்கிள் ஆகும்போது, நான் அவரை அன்புத்தம்பி என்று கூப்பிடுவது தவறில்லை தானே. அன்புத்தம்பி விஜய் ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து கொண்டிருக்கிறார்கள். கரண் கட் ஆனால் இருட்டில் புழுக்கம் ஏற்படும். ஆனால், காற்று இல்லாத புழுக்கத்தை கூட தாங்கிக் கொள்ளலாம் , வெளியில் மட்டும் சென்று விட வேண்டாம் என்று பயந்து உள்ளேயே இருந்து விடுகின்றனர். இதெல்லாம் விஜய் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் நடைபெற்றவை, என்று கூறினார்.
அடுத்ததாக குற்றச் சம்பவங்களை பட்டியலிட்ட கனிமொழி, "தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த 4 மாதங்களில் கூட்டுறவு சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இந்த 4 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 550 குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. நம்ம அண்ணன் ஸ்டாலின் சொல்வதைப்போல, இந்த ஆட்சியில் மின்வெட்டிற்கும் அரிவாள் வெட்டிற்கும் தான் போட்டியே. வேற எதற்கும் இந்த ஆட்சியில் போட்டியில்லை.
இதுவரை 550 குற்ற சம்பவங்கள் , அதில் 200க்கும் அதிகமானவை கொலைகள், 300க்கும் அதிகமானவை பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான பாலியல் வன்முறைகள்.. 8 காவல் மரணங்கள் , காவல்துறையின் அமைச்சர் முதல்வர் விஜய் அவர்கள் தான். இது வரைக்கும் 10 - க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த மாற்றங்களை தான் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். மாற்றம் மாற்றம் என்று கூறி மக்கள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர்," என்று காட்டமாக கூறியிருந்தார்.