📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 05, 2026 08:00 AM

சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள்

சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள்

மோசமான சளிக்காய்ச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பவர்கள் சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

65 வயதைத் தாண்டியவர்கள், ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோர் அத்தகையோரில் அடங்குவர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துவருவதையொட்டி இந்த வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் 2026 தென் மண்டலப் பருவ சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் (2026 Southern Hemisphere seasonal influenza vaccine) போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சும் தொற்றுநோய் அமைப்பும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டன. ஏற்கெனவே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதோருக்கு இது பொருந்தும்.