சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகள் கூடுவதால் பட்டதாரிகள் தன்னம்பிக்கையுடன் முன்னேறலாம்: ஓங் யி காங்
இன்னும் கூடுதலான போட்டித்தன்மையுடனும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையிலும் சிங்கப்பூர் இருப்பதால், இங்கு படித்து பட்டம் பெறுவோர் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் இருக்கலாம் என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஏறத்தாழ 250 மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பட்டதாரிகளுக்கான வேலைச்சந்தை இறுக்கமாக இருப்பதையும் வேலை தேடுவதில் அதிகப் பதற்றம் நிலவுவதையும் ஒப்புக்கொண்டார்.
“நீங்கள் வீழ்ச்சியடையும் அல்லது தேக்கமடையும் பொருளியலுக்குள் அடி எடுத்து வைக்கவில்லை. மாறாக, வளர்ந்து வரும், முதலீடுகளை ஈர்க்கும், தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பொருளியலுக்குள் நுழைகிறீர்கள்.
“எனவே உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நீங்கள் இன்னும் பிரகாசிக்க வேண்டிய திறனாளர்கள்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற கென்ட் ரிட்ஜ் அமைச்சர்நிலைக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார் சுகாதார அமைச்சருமான திரு ஓங்.
வேலைச்சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தனது கணிப்புகளை முன்வைத்த அவர், மாணவர்கள் தங்கள் வாழ்க்கைத்தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், மதிப்பெண்கள் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்காக முதலாளிகளிடையே நிலவும் போட்டியைத் தணிக்குமாறும் வேலைக்கு ஆள் எடுப்பது ஒரு கடுமையான போட்டியாக மாறுவதைத் தடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“முதலாளிகள் தங்களின் தகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்கவில்லை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“ஆனால், அதிகத் தொழிற்பயிற்சிகள், கூடுதல் சான்றிதழ்கள், சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற முதலாளிகளின் ஒவ்வொரு கூடுதல் நிபந்தனையும் ஒரு சிறந்த தகுதிப் பட்டியலை உருவாக்குவதை நோக்கி ஓட வேண்டிய கட்டாயத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது,” என்றார் திரு ஓங்.