📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 09:03 AM

சிங்கப்பூரில் மரணமடைந்த இளைஞா் உடலை மீட்டுத் தர கோரிக்கை

சிங்கப்பூரில் மரணமடைந்த இளைஞா் உடலை மீட்டுத் தர கோரிக்கை

சிங்கப்பூரில் மரணமடைந்த இளைஞா் உடலை மீட்டுத் தர கோரிக்கை

சிங்கப்பூரில் மரணமடைந்த காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞரின் உடலை மீட்டு சொந்த ஊா் கொண்டு வரவேண்டும் என்று அவரது பெற்றோா் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

காட்டுமன்னாா்கோவில் அடுத்த வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் வசிப்பவா் பூபதி மகன் பாரதிராஜா (34). இவா் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டா் பணியாற்றி வந்தாா். . திங்கள்கிழமை இரவு தாய் தந்தையரிடம் பேசிவிட்டு உறங்கி உள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு முப்பது மணிக்கு பணிக்கு செல்வதற்கு எழுப்பும் போது பாரதி ராஜா இறந்து கிடந்ததாக அறையில் தங்கியுள்ள சக நண்பா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வடக்கு கஞ்சங்கொல்லையில் வசிக்கும் தாய் தந்தையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பூபதி குடும்பத்தினருக்கு, தற்போது இறந்து போன ஒரே மகனின் உடலை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.