📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 05:03 AM

 சென்னை, திருவள்ளூரில் இன்று மழை பெய்யும்

 சென்னை, திருவள்ளூரில் இன்று மழை பெய்யும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:

தெற்கு தெலுங்கானா முதல், மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா, தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில், 7.6 கி.மீ., உயரத்தில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

அதனால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 12ம் தேதி வரை, இயல்பை விட கூடுதலாக 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.