📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 07, 2026 01:03 PM

சிங்கப்பூரில் ஜமாலியன்ஸ் குடும்ப தின நிகழ்ச்சி

சிங்கப்பூரில் ஜமாலியன்ஸ் குடும்ப தின நிகழ்ச்சி

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை 06.09.2026 அன்று சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவில் ஜமாலியன்ஸ் ஒன்றுகூடும் குடும்ப தின நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.

மாணவர்களுக்கான போட்டிகள், பெற்றோர்களுக்கான விளையாட்டுகள், டாக்டர் ஹபீப் சகிலா பானு வழங்கிய மருத்துவச் சொற்பொழிவு, அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகள், சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினர் ஏறக்குறைய 150 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.