📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 01:03 PM

செப்.,9ல் த.வெ.க., கூட்டணி கூட்டம்: கம்யூ., கட்சிகள் புறக்கணிப்பு?

செப்.,9ல் த.வெ.க., கூட்டணி கூட்டம்: கம்யூ., கட்சிகள் புறக்கணிப்பு?

சென்னை: ''த.வெ.க., அமைச்சரவையிலும், கூட்டணியிலும் சேர மாட்டோம்; 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்துவோம்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன. த.வெ.க, கூட்டணியில், ம-.தி.மு.க.,வும் இணைந்துள்ளது.

த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், விஜய் தலைமையில், கடந்த ஜூலை 1ம்தேதி நடந்தது. அதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின், அடுத்த கூட்டம் வரும் 9ம் தேதி சென்னையி ல் நடைபெற உள்ளது.

இதற்காக, த.வெ.க., அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று இ.கம்யூ., -மா.கம்யூ., ஆகிய கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது; கூட்டணி கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது; குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது உள்ளிட்டவை குறித்து த.வெ.க., கூட்டணி கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

'பிரதமர் வேட்பாளர் விஜய்' என, த.வெ.க.,வினரும், 'பிரதமர் வேட்பாளர் ராகுல்' என, காங்கிரசாரும் கூறி வரும் நிலையில், இது குறித்தும் பேசப்பட உள்ளது. முதல்வர் விஜயின், லண்டன் பயணத்துக்கு முன், இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இ.கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: த.வெ.க., அமைச்சரவையிலும், த.வெ.க., கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறவில்லை; இடம் பெற மாட்டோம். த.வெ.க., கூட்டணியின் முதல் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. வரும், 9ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, கட்சி முடிவு செய்யும்.

முதல்வர் விஜயை, பிர தமர் வேட்பாளர் என, த.வெ.க.,வினர் கூறுகின்றனர். ஜனநாயகத்தில் கருத்து சொல்வது இயல்பானது.

மத்தியில் பா.ஜ., அரசு நீடிக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்போம். பா.ஜ., அரசு, பார்லிமென்ட் ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறுகிறது. பா.ஜ.,வை வீழ்த்துவது, 'இண்டி' கூட்டணியின் கடமை. எனவே, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அண்ணா நகரில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை, த.வெ.க., அமைச்சர்கள் நேற்று மாலை சந்தித்தனர்.

பின், வைகோ கூறுகையில், “த.வெ.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், ம.தி.மு.க., பங்கேற்கும். சட்டசபை நேரடி ஒளிபரப்பு மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துகிறது. அதனால், ஆளும் கட்சிக்கு ஆதரவு பெருகுகிறது.

''எதிர் தரப்பில் எவ்வித கேள்விகள் வந்தாலும், சிறப்பாக பதில் அளிக்கும் வகையிலான ஆற்றலை அமைச்சர்கள் பெற்றுள்ளனர். முதல்வர் விஜய், ஆங்கிலத்தில் பேசியது அழகாக இருந்தது.

''ஊழலை ஒழிப்பது ஒன்றே குறிக்கோள் என சொன்னது மட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அதை முற்றிலும் அழித்து வருகின்றனர்,” என்றார்.